கூடங்குளத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இன்பதுரை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

கூடங்குளத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இன்பதுரை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

Update: 2020-06-25 19:13 GMT
கூடங்குளம், 

கூடங்குளம் பாக்கியா நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் செலவில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. இன்பதுரை எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தார். 

அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, முன்னாள் கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், துரைசாமி மற்றும் லிங்கத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சமூகரெங்கபுரம் பஞ்சாயத்து சிங்காரத்தோப்பு, முத்துநாடார் குடியிருப்பு, ஈனன்குடியிருப்பு ஆகிய கிராமங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இன்பதுரை எம்.எல்.ஏ. அரிசி பைகளை வழங்கினார். தொடர்ந்து அவர், சமூகரெங்கபுரம் இலங்கை அகதிகள் முகாமுக்கு சென்றும் அரிசி பைகளை வழங்கினார்.

 இதேபோல் வள்ளியூர் யூனியன் அடங்கார்குளம்-தனக்கர்குளம் பஞ்சாயத்து, மேல சிவசுப்பிரமணியபுரம், மாணிக்கம்புதூர், பள்ளவிளை, ராமலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இன்பதுரை எம்.எல்.ஏ. அரிசி பைகளை வழங்கினார். மேலும் அவர், ராதாபுரம் யூனியன் பெரியதாழை மிக்கேல் ஜார்ஜியார் நகர், டாட்டா குடியிருப்பு, அம்பாள் நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 600 குடும்பங்களுக்கு அரிசி பைகளை வழங்கினார். 

அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அழகானந்தம் மற்றும் முருகேசன், அரசு வக்கீல் பழனி சங்கர், சமூகை சந்திரன், கதிரவன் ரோச், உவரி ரமேஷ், தனக்கர்குளம் பண்ணையார், கதிரேசன், நாலாயிரம், தனமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ராதாபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு 2 சக்கர நாற்காலியை இன்பதுரை எம்.எல்.ஏ. வழங்கினார். தலைமை டாக்டர் மாதவன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்