பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆகஸ்டு மாதம் வரை பழைய பஸ் பாஸ் மூலம் பயணம் செய்யலாம் - கலெக்டர் ராஜாமணி தகவல்

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆகஸ்டு மாதம் வரை பழைய பஸ் பாஸ் மூலம் பயணம் செய்யலாம் என்று கலெக்டர் ராஜாமணி கூறியுள்ளார்.

Update: 2020-06-25 22:30 GMT
கோவை

கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 2019-2020 ஆம் ஆண்டில் பார்வை திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மாவட்டம் முழுவதும் சென்று வருவதற்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. 

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பஸ்களில் பயணம் மேற்கொள்ள வழங்கப்பட்ட இந்த இலவச பஸ் பாசை புதுப்பிக்க தேவை இல்லை. 

கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பஸ் பாசையே தொடர்ந்து வருகிற ஆகஸ்டு மாதம் வரை புதுப்பிக்காமல் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் பழைய பஸ் பாசை புதுப்பித்து பயன்படுத்துவது தொடர்பாக உரிய அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்