திருச்சி மாவட்டத்தில் ஒரேநாளில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு
திருச்சி மாவட்டத்தில், ஒரே நாளில் புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்து உள்ளது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 36 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இவர்களில் ஒருவர் மட்டும் வெளிநாட்டில் இருந்து வந்தவர் ஆவார்.
மற்ற 51 பேரும் திருச்சி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்களில் மணப்பாறை பகுதியில் மட்டும் 14 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆவார். மணப்பாறை பழைய காலனி, ராஜீவ் நகர், வையம்பட்டி மற்றும் மருங்காபுரி பகுதியில் இவர்கள் உள்ளனர்.
திருச்சி நகரில் ஏற்கனவே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பெரிய கடை வீதி, மேலப்புலிவார்டு சாலை, தேவதானம், எடமலைப்பட்டிபுதூர், கருமண்டபம், தில்லைநகர், உறையூர், திருவெறும்பூர் பகுதிகளில் உள்ளவர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
310 ஆக உயர்வு
இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 258-ல் இருந்து 310 ஆக உயர்ந்து உள்ளது. இந்தநிலையில் திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து நேற்று மட்டும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 21 பேர், பெரம்பலூர், கடலூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 24 பேர் பூரண குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.