அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பனப்பாக்கம்,
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியை அடுத்த சிறுகரும்பூர் கிராமத்தை சேர்ந்த பரசுராமன் மகள் தேவி (வயது 24), பி.எஸ்சி. பட்டதாரி. இவருக்கு வேலூர் மாவட்டம் வள்ளிமலையில் அடுத்த மாதம் 2-ந் தேதி திருமணம் நடைபெற முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை பரசுராமன் அதேபகுதியில் 100 நாள் வேலைக்கு சென்றார். வீட்டில் தனியாக இருந்த தேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து திருமணம் நடைபெற இருந்த நிலையில் தேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.