மங்கலம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 36 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 879 ஆக உயர்வு

மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2020-06-20 04:44 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று புதிதாக மேலும் 36 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 879 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று பாதித்தவர்களில், திருவண்ணாமலை நகராட்சியில் 4 ஆண்கள், 5 பெண்கள், கலசபாக்கத்தில் 14 வயது சிறுவன் உள்பட 9 ஆண்கள், 4 பெண்கள், காட்டாம்பூண்டியில் 3 ஆண்கள், போளூரில் 2 ஆண்கள், தச்சூர், வாணாபுரம், துரிஞ்சாபுரத்தில் தலா ஒரு இளம்பெண், ஆக்கூரில் 2 வாலிபர்கள், மங்கலம், கீழ்பென்னாத்தூர், கிழக்கு ஆரணி, சேத்துப்பட்டில் தலா ஒரு ஆண் என தொத்தம் 36 ஆவர்.

இவர்களில் 11 பேர் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள். 25 பேர் ஏற்கனவே தொற்று ஏற்பட்டவர்களுடன் பழக்கத்தில் இருந்தவர்கள்.

மங்கலம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் 56 வயது மதிக்கத்தக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினமும் கொரோனா தடுப்பு பணிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வந்துள்ளது. இதனையடுத்து இவருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவர் சே.கூடலூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் நெருங்கி பழகிய போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்