செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 115 பேர் பாதிப்பு - ஒரே நாளில் 5 பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 115 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில் 5 பேர் பலியானார்கள்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட ஆனந்தம் அவென்யூ பகுதியில் வசிக்கும் 44 வயது ஆண், காட்டாங்கொளத்தூர் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த 31 வயது வாலிபர், 51 வயது பெண், மண்ணிவாக்கம் ஊராட்சி ராம்நகர் 3வது தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 62 வயது மூதாட்டி, 33 வயது வாலிபர், 33 வயது இளம்பெண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட தைலாவரம் எம்.ஜி.ஆர். தெருவில் வசிக்கும் 21 வயது வாலிபர், கூடுவாஞ்சேரி பலராமபுரம் அவென்யூ பகுதியில் வசிக்கும் 55 வயது ஆண், பெரியார் ராமசாமி தெருவை சேர்ந்த 70 வயது மூதாட்டி, வீரபாகு நகர் பகுதியை சேர்ந்த 55 வயது ஆண், 51 வயது பெண், வண்டலூர் ஓட்டேரி விரிவு பகுதி அரி தெருவை சேர்ந்த 23 வயது வாலிபர், காரணைப்புதுச்சேரி மயிலி அம்மன் நகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண், ஊரப்பாக்கம் அய்யஞ்சேரி மெயின் ரோடு, பாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த 35 வயது ஆண், கங்கை நகர் 3வது தெருவை சேர்ந்த 47 வயது பெண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,285 ஆக உயர்ந்தது. இவர்களில் 1,695 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 74 வயது, 62 வயது, 60 வயதான 3 முதியவர்கள் மற்றும் 59 வயது ஆண், 56 வயது பெண் என ஒரே நாளில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படப்பை
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் உள்ள காமராஜர் தெருவைச் சேர்ந்த 32 வயது வாலிபர், மேல் படப்பை பஜார் தெருவைச் சேர்ந்த 57 வயது பெண் மற்றும் ஆதனூர் பலராமன் தெருவைச் சேர்ந்த 55 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது.
இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 55 பேருக்கு கொரோனா உறுதியானது. மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 945 ஆனது. இவர்களில் 502 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 433 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேர் பலியானார்கள்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 123 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 2,155 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 1,117 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 1,006 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 32 பேர் இறந்து உள்ளனர்.