திருப்பத்தூர் நகராட்சி சார்பில் ரூ.9½ கோடியில் மக்கும், மக்காத குப்பைகளை பிரித்தெடுத்து அனுப்பும் பணி கலெக்டர் நேரில் ஆய்வு
திருப்பத்தூர் நகராட்சி சார்பில் ரூ.9½ கோடியில் மக்கும், மக்காத குப்பைகளை பிரித்தெடுத்து அனுப்பும் பணி கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் நகராட்சிக்கு சொந்தமான கிருஷ்ணகிரி மெயின் ரோடு பவுசநகரில் 8.5 ஏக்கர் நிலத்தில் பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு 20 அடி உயரத்துக்கு மலைபோல் தேங்கி கிடந்தது. அந்தக் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரித்து, அதில் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரித்து, குப்பை கிடங்கை காலி செய்ய ரூ.9½ கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலால் பணிகள் நின்று விட்டது. நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் குப்பை கிடங்குக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மலைபோல் குவிந்துள்ள குப்பை கிடங்கில், மிக விரையில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து அனுப்பும் பணிகளை முடிக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் நகராட்சி சார்பில் கட்டப்பட்ட மின்சார சுடுகாட்டுக்கு சென்று, அங்கு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் உரக்கிடங்கை நேரில் பார்வையிட்டார். மின்சார சுடுகாட்டுக்கும், உரம் தயாரிக்கும் கிடங்குக்கும் இடையே சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என உத்தரவிட்டார்.
மின்சார சுடுகாட்டில் குடிநீர் வசதி, ஈமச் சடங்குகள் செய்ய வசதி ஆகியவற்றை செய்து கொடுக்க வேண்டும். கட்டிடத்துக்கு வர்ணம் பூச வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் ராஜரத்தினம், பணி மேற்பார்வையாளர் சீனிவாசன், துப்புரவு ஆய்வாளர் விவேக் ஆகியோர் உடனிருந்தனர்.