வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் சுற்றினால் வழக்கு - வேலூர் கலெக்டர் எச்சரிக்கை
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த காய்கறி, மளிகைக்கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படுகிறது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் சுற்றினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைவரும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வணிகர் சங்கத்தினர், மாநகராட்சி அதிகாரிகள், அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 18 ஆயிரத்து 193 பேருக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. அதில், 206 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் கொரோனா தொற்று 3 மடங்காக அதிகரித்து உள்ளது.
வெளி மாவட்டங்களில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு வரும் அனைவரும் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் சளிமாதிரி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதன்முடிவு வரும்வரை அவர்கள் வீட்டைவிட்டு வெளியில் வரக்கூடாது. முகக்கவசம் அணியாத நபர்கள், தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முகக் கவசம் அணியாத நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். தொடர்ந்து இதே தவறை அவர்கள் செய்தால் கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும்.
சமூக இடைவெளி பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும். மேலும் 2 நாட்கள் அந்தக் கடைகள் திறக்க அனுமதிக்கப்படாது. முகக்கவசம் அணியாமல் கடைக்கு வருபவர்களுக்கு பொருட்கள் வழங்கக்கூடாது. நேதாஜி மார்க்கெட், சாரதி மாளிகை, லாங்கு பஜார், பர்மா பஜாரில் உள்ள கடைகள் இனிமேல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படாது. அங்குள்ள கடைகளில் சில்லரை வியாபாரம் செய்யக்கூடாது. மொத்த வியாபாரம் செய்ய மட்டுமே அனுமதி. இதை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.
மாவட்டம் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் காய்கறி, மளிகைக்கடைகள் தினமும் காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே இயங்கும். திருமண மண்டபங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க அனுமதி கிடையாது. அதேபோன்று மத வழிபாட்டுத் தலங்களில் சுபநிகழ்ச்சிகள் நடத்தவும் தடை நீடிக்கிறது.
திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரின் முகவரி, செல்போன் எண்களை கண்டிப்பாக மண்டப நிர்வாகிகள் பெற வேண்டும். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வெளியில் சுற்றினால் வழக்குப்பதிவு செய்யப்படும். கொரோனா தொற்றை தடுக்க 6 தாலுகாவிற்கும் உதவி கலெக்டர் நிலையிலான அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து இ-பாஸ் இன்றி வேலூருக்கு வரும் வாகனங்களும், இங்கிருந்து சென்னைக்கு செல்லும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். மேலும் அந்த வாகனத்தில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் ஒருவாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள். இ-பாஸ் பெற்று சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வேலூருக்கு வருபவர்களுக்கு சளிமாதிரி பரிசோதனை செய்யப்படும். அதன் முடிவுகள் வரும் வரை அவர்கள் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்படுவார்கள். பரிசோதனையில் கொரோனா அறிகுறி இல்லை என்றால் தான் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு கலெக்டர் பேசினார்.