பழனி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து துணிகரம்: கத்தி முனையில் விவசாயி குடும்பத்தினரிடம் 20 பவுன் நகைகள் கொள்ளை
பழனி அருகே நள்ளிரவில் கத்தி முனையில் விவசாயி குடும்பத்தினரிடம் 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. முகமூடி அணிந்தபடி கொள்ளையை அரங்கேற்றிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
நெய்க்காரப்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாளையூத்து சப்பளநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகசாமி (வயது 60). விவசாயி. இவர் அந்த பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் மனைவி சின்னத்தாய் (48), மகள்கள் காவியா (22), சங்கவி (18), மகன் செல்வபிரகாஷ் (15) மற்றும் அக்காள் காளியாத்தாள் (65) ஆகியோருடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் முருகசாமி, சின்னத்தாய் ஆகியோர் வீட்டின் வெளியே முன்புறம் படுத்திருந்தனர். மற்றவர்கள் அனைவரும் வீட்டுக்குள் படுத்திருந்தனர். இந்தநிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் அவர்கள் வீட்டில் வளர்க்கும் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதனால் முருகசாமி எழுந்து பார்த்தபோது முகமூடி அணிந்த 10 பேர் கொண்ட கும்பல், வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தனர்.
திடீரென அவர்கள், முருகசாமியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் அந்த கொள்ளை கும்பல், அங்கு தூங்கி கொண்டிருந்த முருகசாமியின் மகள்கள், மகன் மற்றும் அக்காள் ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டி, அவர்கள் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம், கம்மல் என 3 பவுன் நகையை பறித்தனர்.
மேலும் வீட்டு பீரோவில் வைத்திருந்த 17 பவுன் நகைகளையும் கொள்ளையடித்தனர். இதையடுத்து அந்த கும்பல், முருகசாமி மற்றும் குடும்பத்தினர் வைத்திருந்த செல்போன்களை பறித்தனர். காளியாத்தாள் மட்டும் தனது செல்போனை ஆடைக்குள் மறைத்து வைத்து கொண்டார். பின்னர் விவசாயி குடும்பத்தினர் அனைவரையும் வீட்டுக்குள் அடைத்து வைத்து, வெளியே கதவில் பூட்டு போட்டுவிட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதைத்தொடர்ந்து முருகசாமி, தனது அக்காள் காளியாத்தாள் செல்போன் மூலம் அக்கம்பக்கத்தினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். பின்னர் அவர்கள் வந்து, முருகசாமி குடும்பத்தினரை மீட்டனர். மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து சாமிநாதபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர்கள் சையதுபாபு (தாலுகா), வீரகாந்தி (சத்திரப்பட்டி), செந்தில்குமார் (டவுன்) மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டில் விசாரணை நடத்தினர். மேலும் திண்டுக்கல்லில் இருந்து மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது.
அந்த மோப்ப நாய், வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி தோட்ட பகுதிக்கு சிறிது தூரம் ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இதற்கிடையே கொள்ளை சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொள்ளையில் தொடர்புடையவர்களை பிடிக்க துணை சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் 2 தனிப்படைகளை அமைத்து அவர் உத்தரவிட்டார். அதன்படி, கொள்ளையர்களை பிடிக்க தனிப்படையினர் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். வீடு புகுந்து கத்தி முனையில் 20 பவுன் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முருகசாமியின் தோட்டத்துக்கு கொள்ளை கும்பல் வந்தபோது, அவரின் வீட்டில் வளர்த்து வந்த நாய், அவர்களை கண்டு குரைத்துள்ளது. இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கத்தியால் நாயின் முதுகு பகுதியில் வெட்டினர். இதில் அந்த நாய்க்கும் காயம் ஏற்பட்டது. அதன்பின்னரே சத்தம் கேட்டு முருகசாமி வெளியே வந்துள்ளார். மேலும் முருகசாமியின் வீட்டுக்குள் நுழைந்த பின்னர் அங்கிருந்தவர்களிடம் நகைகளை பறித்து கொண்டிருந்தபோது, காவியா, சங்கவி ஆகியோர் நகையை கழட்டி கொடுக்க மறுத்து சத்தம் போட முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளை கும்பல் அவர்கள் இருவரையும் தாக்கி காவியா வைத்திருந்த செல்போனையும் உடைத்துள்ளனர். இதற்கிடையே காளியாத்தாள் தான் வைத்திருந்த செல்போனை ஆடைக்குள் மறைத்து வைத்தார். பின்னர் கொள்ளையர்கள் சென்றதும் அந்த செல்போனை வைத்து அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்ததுடன் போலீசுக்கும் தெரிவித்தனர்.