விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 23 பேருக்கு பாதிப்பு: - மதுரையில் ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா

மதுரையில் நேற்று ஒரே நாளில் 33 பேருக்கும், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 23 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-06-16 02:02 GMT
மதுரை,

மதுரையில் நேற்று 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மதுரை தத்தனேரி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன், கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த 33 வயது வாலிபர், டி.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்த 31 வயது பெண், விளாங்குடி பகுதியை சேர்ந்த 45 வயது ஆண், 31 வயது பெண், யூனியன் பேங்க் காலனி பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர், பழைய விளாங்குடி பகுதியைச் சேர்ந்த 20 வயது வாலிபர், 26 வயது வாலிபர், புது விளாங்குடி பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர், நரிமேடு பகுதியை சேர்ந்த 35 வயது வாலிபர், முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபர்.

புதூர் பகுதியை சேர்ந்த 45 வயது பெண், கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், பழைய குயவர்பாளையம் பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர், இஸ்மாயில்புரம் பகுதியை சேர்ந்த 49 வயது ஆண் மற்றும் 48 வயது பெண், மேலஅனுப்பானடி பகுதியை சேர்ந்த 47 வயது பெண், 80 வயது மூதாட்டி, 39 வயது வாலிபர், 39 வயது பெண், சிந்தாமணி பகுதியை சேர்ந்த 37 வயது பெண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதேபோல் செல்லூர் பகுதியை சேர்ந்த 31 வயது பெண், 43 வயது ஆண், 29 வயது வாலிபர், பரவை பகுதியை சேர்ந்த 45 வயது பெண் மற்றும் 15 வயது சிறுவன், ஆழ்வார்புரம் பகுதியை சேர்ந்த 44 வயது ஆண், மேலூர் பகுதியை சேர்ந்த 50 வயது பெண், அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த 54 வயது பெண், மேலப்பொன்னகரம் பகுதியை சேர்ந்த 72 வயது முதியவர், 67 வயது மூதாட்டி, சூர்யா நகர் பகுதியை சேர்ந்த 42 வயது ஆண், கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த 49 வயது ஆண் ஆகியோரும் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இவர்களில் 3 பேர் சென்னையில் இருந்து கார், வேன் மற்றும் விமானம் மூலம் மதுரை வந்தவர்கள். இதேபோல் கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 33 வயது வாலிபர் நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு வந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது தெரியவந்தது. இதுதவிர பரவை மார்க்கெட்டில் வேலை செய்யும் சிலரும் இதில் அடங்குவர். பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 43 வயது ஆண். இவர் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் லோடுமேனாக பணியாற்றி வருகிறார். தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் பேராசிரியர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபரிடம் இருந்து கொரோனா பரவியது தெரியவந்தது.

கொரோனா உறுதிசெய்யப்பட்ட இவர்கள் 33 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 459 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே கொரோனா பாதிக்கப்பட்டு ஏற்கனவே சிகிச்சையில் இருந்த மதுரையை சேர்ந்த 18 பேர் குணம் அடைந்ததை தொடர்ந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 4 பெண்கள் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர்.நகரை சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று உறுதி ஆன நிலையில் அவர் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சுழி அருகே உள்ள புலங்காலை சேர்ந்த 54 வயது பெண், சிவகாசி வடமலாபுரத்தை சேர்ந்த 34 வயது பெண், வத்திராயிருப்பை சேர்ந்த 57 வயது பெண் ஆகிய 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 2 பேர் சென்னையில் இருந்து திரும்பியவர்கள். திருச்சுழி மீனாட்சிபுரத்தை சேர்ந்த 40 வயது நபருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் சுந்தரபாண்டியத்தை சேர்ந்த 38 வயது நபருக்கும், வத்திராயிருப்பை சேர்ந்த 44 வயது நபருக்கும், சாத்தூர் வாழவந்தான்புரத்தை சேர்ந்த 30 வயது நபருக்கும் கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இவர்கள் அனைவருமே சென்னையில் இருந்து திரும்பியவர்கள். இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 177 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று திருவாடானை பாரதிநகரை சேர்ந்த 23 வயது பெண், ஆர்.எஸ்.மங்கலம் ஓடைக்கால் பகுதியை சேர்ந்த 55 வயது பெண், 9 வயது சிறுமி, திருவாடானை தோட்டாமங்கலம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி, 14 வயது சிறுமி, மந்திவலசையை சேர்ந்த 35 வயது நபர், 24 வயது பெண் மற்றும் ராமநாதபுரம் சக்கரக்கோட்டையை சேர்ந்த 48 வயது பெண், திணையத்தூரை சேர்ந்த 5 வயது சிறுவன், 8 வயது சிறுமி என மொத்தம் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 187 ஆக உயர்ந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காரைக்குடி தாலுகா ஆபீஸ் சாலை பகுதியை சேர்ந்த 30 வயது நபர் சென்னையில் இருந்து மனைவி, தந்தையுடன் சொந்த ஊரான காரைக்குடி வந்துள்ளார். அவர்களை பரிசோதனை செய்த நகராட்சி சுகாதார பிரிவினர் கொரோனா தொற்று 3 பேருக்கும் இருப்பதை உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல சிங்கம்புணரி கீழத்தெருவை சேர்ந்த 70 வயது வக்கீல் குடும்பத்துடன் சென்னையில் இருந்து சிங்கம்புணரி வந்துள்ளார். வக்கீல் உள்பட 4 பேருக்கு பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்ததில் வக்கீலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

சிங்கம்புணரி அருகே சிலநீர்ப்பட்டிக்கு சென்னையில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, அதில் 26 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் வசிக்கும் பகுதியில் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்