மது பிரியர்களின் வருகை குறைந்ததால் மாநில எல்லை பகுதியில் மதுக்கடைகள் வெறிச்சோடின
மது பிரியர்களின் வருகை குறைந்ததால் புதுச்சேரி மாநில எல்லை பகுதியில் உள்ள மதுக்கடைகள் வெறிச்சோடின.
பாகூர்,
புதுச்சேரி என்றாலே பலருக்கும் நினைவில் வருவது குறைந்த விலையில் தரமான மதுபான வகைகள் கிடைக்கும் என்பதுதான். இதனால் பொழுதுபோக்குவதற்காக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து செல்வார்கள். இதன் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைத்து வந்தது.
இந்தநிலையில் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட மதுக்கடைகள், கடந்த மாதம் திறக்கப்பட்டது. ஆனால் தமிழகத்துக்கு நிகராக புதுவையில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இதனாலும் எல்லையில் போலீசாரின் கட்டுப்பாடுகளாலும் தமிழக பகுதியான கடலூர், விழுப்புரம், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து மதுபிரியர்கள் வருவது குறைந்துள்ளது. விலை உயர்வால் உள்ளூர் மதுபிரியர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. அவர்கள் விலை குறைவாக கிடைக்கும் சாராயத்தை தேடிச் சென்று விட்டனர்.
இதுபோன்ற காரணங்களால் புதுச்சேரி எல்லை பகுதியான முள்ளோடை, உச்சிமேடு, பரிக்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், சோரியாங்குப்பம், குருவிநத்தம், மணமேடு, கரையாம்புத்தூர் ஆகிய பகுதியில் உள்ள மதுக்கடைகள் மதுபிரியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதுபற்றி மதுக்கடைக் காரர்களிடம் கேட்டபோது, ஊரடங்குக்கு முன்பு ஒரு நாளைக்கு பல லட்சம் ரூபாய்க்கு விற்பனையான மது, தற்போது பாதியாக குறைந்துள்ளது. சோரியாங்குப்பம் பகுதியில் ரூ.50 ஆயிரத்திற்கும் குறைவாகவே விற்பனையாகிறது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.