குளச்சலில் ரூ.10 லட்சம் செலவில் படிப்பக கட்டிடம் வசந்தகுமார் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
குளச்சலில் ரூ.10 லட்சம் செலவில் படிப்பக கட்டிடம் கட்ட வசந்தகுமார் எம்.பி. அடிக்கல் நாட்டினார்.
குளச்சல்,
குளச்சல், வாணியக்குடியில் படிப்பகம் கட்ட வேண்டும் என குருந்தன்கோடு யூனியன் துணைத்தலைவர் எனல்ராஜ் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் செலவில் வாணியக்குடியில் படிப்பக கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பங்குத்தந்தை ஆன்றோ வினோத்குமார் ஜெபம் செய்தார். சிறப்பு விருந்தினராக வசந்தகுமார் எம்.பி. கலந்து கொண்டு படிப்பக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில், பங்கு பேரவை துணைத்தலைவர் ஆன்றனி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், சைமன்காலனி பஞ்சாயத்து தலைவி சுஜாதா, மாநில வர்த்தக காங்கிரஸ் துணைத்தலைவர் ஜாண்சுந்தர ராஜ், செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட செயலாளர் ஜெயராஜ், துணைத்தலைவர் முனாப், குளச்சல் நகர தலைவர் சந்திரசேகர், மாவட்ட ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் பினுலால்சிங், துணை அமைப்பாளர் மாகீன், குளச்சல் நகர அமைப்பாளர் ரமேஷ் மற்றும் வாணியக்குடி விசைப்படகுகள் சங்க நிர்வாகிகள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பக்க சுவர் கட்டும் பணி
இனயம் மீனவ கிராமத்தில் கடலோர சாலை அமைக்க பக்க சுவர் கட்டுவதற்கு கன்னியாகுமரி எம்.பி. தொகுதி மேம்பாட்டு பொது நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த கட்டுமான பணியை குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் வசந்தகுமார் எம்.பி. தொடங்கி வைத்தார்.
இனயம் பங்கு பணியாளர் அன்பரசன் ஜெபம் செய்தார். நிகழ்ச்சியில் விஜயதரணி எம்.எல்.ஏ., பங்கு பேரவை துணை தலைவர் பிராங்கிளின், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஜோர்தான் மற்றும் பலர் கலந்து கோண்டனர்.