ஆட்கொல்லி கொரோனாவுக்கு மும்பையில் ஒரே நாளில் 97 பேர் சாவு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 ஆயிரத்தை கடந்தது

மும்பையில் ஒரே நாளில் ஆட்கொல்லி கொரோனாவுக்கு 97 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 ஆயிரத்தை கடந்தது.

Update: 2020-06-12 01:29 GMT
மும்பை,

மும்பையில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட பின் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நகரில் நேற்று ஒரே நாளில் 1,418 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நகரில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 85 ஆகி உள்ளது. இதேபோல மும்பையில் புதிதாக 97 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதில் 63 பேர் ஆண்கள். 34 பேர் பெண்கள் ஆவர். இதனால் நகரில் வைரஸ் நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,954 ஆக அதிகரித்து உள்ளது.

மராட்டியத்தில் மும்பை தவிர மற்ற பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் அடைப்புகுறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-

தானே மாநகராட்சி - 5,501 (146 பேர் பலி), தானே புறநகர் - 1,496 (23), நவிமும்பை மாநகராட்சி - 4,126 (96), கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி - 2,241 (43), உல்லாஸ் நகர் மாநகராட்சி - 699 (24), பிவண்டி மாநகராட்சி - 419 (12), மிரா பயந்தர் மாநகராட்சி - 1,197 (54), வசாய் விரார் மாநகராட்சி -1,559 (41), ராய்காட் - 801 (29),

பன்வெல் மாநகராட்சி -835 (29), நாசிக் மாநகராட்சி - 602 (24), மாலேகாவ் மாநகராட்சி 861 (65), புனே மாநகராட்சி - 9,304 (410), பிம்பிரி சின்ஞ்வட் மாநகராட்சி - 834 (19), சோலாப்பூர் மாநகராட்சி - 1,468 (113), அவுரங்காபாத் மாநகராட்சி - 2,218 (121), நாக்பூர் மாநகராட்சி - 857 (12).

மேலும் செய்திகள்