புதுச்சேரியில் கொரோனாவுக்கு 80 வயது முதியவர் பலி
புதுச்சேரியில் 80 வயது முதியவர் கொரோனாவுக்கு பலியானார்.
புதுச்சேரி,
புதுவையில் கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்து நீண்ட காலமாக ஒற்றை இலக்க எண்ணில் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த ஒருமாதமாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகமாகி வரு கிறது. இதனால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணி க்கை கிடுகிடுவென உயர்ந் தது.
புதுவையில் இதுவரை மொத்தம் 132 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இவர்களில் 55 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 77 பேர் புதுச்சேரி கதிர்காமம் கொரோனா சிறப்பு மருத்துவ மனையிலும், ஜிப்மர் மருத்துவ மனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் விழுப்புரம் அருகே குமளம் பகுதியை சேர்ந்த 80 வயது முதியவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற காரணத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக புதுவை அரும்பார்த்தபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். உறவினருடன் கடந்த 4-ந்தேதி கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
அப்போது அவருக்கு கொரோனா மருத்துவ பரி சோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டது. இதனையடுத்து அவர் கதிர்காமம் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் உயிரிழந்தார்.
அவரது உடல் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ளது. கொரோனா காரணமாக உறவினர்களிடம் ஒப்படைக்காமல் அரசு சார்பில் இன்று (புதன்கிழமை) உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

ஏற்கனவே கொரோனா வால் பாதிக்கப்பட்டவர் களுடன் தொடர்பில் இருந்த தால் முதியவருக்கும் தொற்று பரவி உள்ளது. இந்தநிலையில் உயிரிழந்ததையொட்டி முதிய வர் தங்கி இருந்த உறவினர் களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கடந்த 5-ந்தேதி சென்னையில் இருந்து புதுவைக்கு வந்த தனியார் நிறுவன மேலாளர் ஒருவரும், ஏற்கனவே மாகி பிராந்தியத்தில் முதியவர் ஒருவரும் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர்.