மும்பையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது
மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
மும்பை,
மராட்டியம் நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாகும். இங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சீனாவை தாண்டி உள்ளது. தொடர்ந்து இங்கு நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரத்து 553 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மாநிலத்தில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 528 ஆக உயர்ந்து உள்ளது.
இதேபோல மாநிலத்தில் மேலும் 109 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்தனர். இதனால் மராட்டியத்தில் வைரஸ் நோய்க்கு பலியானவா்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 169 ஆக அதிகரித்து உள்ளது.
இதுவரை மாநிலத்தில் 40 ஆயிரத்து 975 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 44 ஆயிரத்து 374 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநில தலைநகர் மும்பையில் நோய் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதும், மும்பையை கொரோனா வைரஸ் புரட்டி போட்டு உள்ளது. இதில் நேற்று நகரில் புதிதாக 1,311 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. அதாவது நகரில் இதுவரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 85 ஆக உயர்ந்து உள்ளது.
இதில் 22 ஆயிரத்து 32 பேர் குணமடைந்து உள்ளனர். தற்ேபாது 26 ஆயிரத்து 345 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல நகரில் புதிதாக 64 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் மும்பையில் வைரஸ் நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,702 ஆக அதிகரித்து உள்ளது.
இதேபோல தானே மாநகராட்சி பகுதியில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
மராட்டியத்தில் மற்ற பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் அடைப்புக்குறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-
தானே மாநகராட்சி - 5,016 (120 பேர் பலி), தானே புறநகர் - 1,241 (22), நவிமும்பை மாநகராட்சி - 3,590 (86), கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி - 1,887 (36), உல்லாஸ் நகர் மாநகராட்சி - 553 (21), பிவண்டி மாநகராட்சி - 294 (12), மிரா பயந்தர் மாநகராட்சி - 946 (39), வசாய் விரார் மாநகராட்சி -1,353 (35), ராய்காட் - 754 (29),
பன்வெல் மாநகராட்சி - 707 (26). மாலேகாவ் மாநகராட்சி - 838 (68). நாசிக் மாநகராட்சி - 504 (19). புனே மாநகராட்சி - 8,537 (381), பிம்பிரி சின்ஞ்வட் மாநகராட்சி - 676 (16), சோலாப்பூர் மாநகராட்சி - 1,321 (104), அவுரங்காபாத் மாநகராட்சி - 1,984 (98), நாக்பூர் மாநகராட்சி - 711 (11).