அடுத்தவர் நலனிலும் அக்கறை கொள்ளுங்கள் ; கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்

புதுவையில் மத வழிபாட்டு தலங்கள் நேற்று காலை முதல் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கவர்னர் கிரண்பெடி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒருபதிவில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-06-09 00:02 GMT
புதுச்சேரி,

புதுச்சேரியில் மத வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், வணிக வளாகம் திறக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அதுதான் உங்கள் நலனை பாதுகாப்பதுடன் அடுத்தவர் நலனையும் பாதுகாக்கும்.

ஒவ்வொருவர் உடல் நலனையும் பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. இது மிகவும் சவாலான நேரம். மற்றவர்களின் உடல் நலனிலும் அக்கறை கொள்வது அவசியம். எனவே அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்