சிதம்பரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை: காதலி உள்பட 4 பேர் கைது
சிதம்பரத்தில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது காதலி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிதம்பரம்,
இதையடுத்து தலைமறைவான அன்பழகனின் காதலியின் குடும்பத்தினரை பிடித்தால் கொலைக்கான காரணம் தெரியவரும் என்பதால் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின்பேரில் சிதம்பரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடத்தப்பட்டதோடு, தலைமறைவான காதலியின் குடும்பத்தினரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவான காதலியின் குடும்பத்தினர் வெளியூர் தப்பி செல்வதற்காக சிதம்பரம் ரெயில்வே பீடர் சாலையில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று ரெயில்வே பீடர் சாலையில் பதுங்கி இருந்த காதலி, அவரது 17 வயது அண்ணன் மற்றும் அவரது தந்தை, தாய் ஆகியோரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், காதலியின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து திட்டம் போட்டு அன்பழகனை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.
இந்த பயங்கர சம்பவம் குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இதையடுத்து காதலியை பார்க்க வீட்டுக்கு வந்த அன்பழகனை காதலியின் அண்ணனான 17 வயது மாணவன் கத்தியால் பின்தலையில் வெட்டி படுகொலை செய்துள்ளார். இதையடுத்து மாணவி மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோர் கொலை செய்யப்பட்ட அன்பழகன் உடலை மறைக்க முயன்றனர். இருப்பினும் அவர்களது வீடு முன்பு ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததால் அன்பழகன் உடலை வீட்டிலேயே போட்டு விட்டு வெளியூருக்கு தப்பி செல்ல முயன்றனர். அப்போது தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்துவிட்டனர்.
மேலும் கைதான 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் மாணவி, அவரது அண்ணன் ஆகியோர் சிறுவர் சீர்திருத்த பள்ளிகளிலும், மாணவியின் தாய், தந்தை ஆகியோர் கடலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அன்பழகன்(வயது 21). இருசக்கர வாகன மெக்கானிக். இவரும், அரங்கநாதன் நகரை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய மாணவியும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
இதுபற்றி அறிந்த பெற்றோர் இருவரையும் கண்டித்ததாக தெரிகிறது. இதையடுத்து மாணவி, அன்பழகனுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். இந்த நிலையில் காதலியின் வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அன்பழகன் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். மாணவி மற்றும் அவரது குடும்பத்தினரை காணவில்லை.
இதனிடையே இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அன்பழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து தலைமறைவான அன்பழகனின் காதலியின் குடும்பத்தினரை பிடித்தால் கொலைக்கான காரணம் தெரியவரும் என்பதால் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின்பேரில் சிதம்பரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடத்தப்பட்டதோடு, தலைமறைவான காதலியின் குடும்பத்தினரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவான காதலியின் குடும்பத்தினர் வெளியூர் தப்பி செல்வதற்காக சிதம்பரம் ரெயில்வே பீடர் சாலையில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று ரெயில்வே பீடர் சாலையில் பதுங்கி இருந்த காதலி, அவரது 17 வயது அண்ணன் மற்றும் அவரது தந்தை, தாய் ஆகியோரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், காதலியின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து திட்டம் போட்டு அன்பழகனை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.
இந்த பயங்கர சம்பவம் குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொலை செய்யப்பட்ட அன்பழகன் 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். இதற்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த மாணவி அன்பழகனுடன் பழகுவதை குறைத்துக் கொண்டார். இதனிடையே அன்பழகன் தனது காதலியின் செல்போனுக்கும், அவரது வீட்டில் உள்ள டி.வி.க்கும் மாதந்தோறும் ரீசார்ஜ் செய்து வந்துள்ளார்.
இதையறிந்த மாணவியின் பெற்றோர் தங்களது மகளை கண்டித்ததோடு, கடந்த சில வாரங்களுக்கு முன்பு டி.வி., செல்போனுக்கு ரீசார்ஜ் செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அன்பழகன் தனது காதலியிடம் செல்போன், டிவிக்கு ரீசார்ஜ் செய்வதாக கூறியுள்ளார். அதற்கு மாணவி ரீசார்ஜ் பண்ணிவிட்டோம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அன்பழகன் மாணவியை தாக்கியுள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவி இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் மாணவியின் பெற்றோர் அன்பழகனை கொலை செய்ய திட்டம் தீட்டி, அந்த திட்டத்தின்படி மாணவி மூலம் சம்பவத்தன்று அன்பழகனை வீட்டுக்கு வருமாறு கூறினார்.