தனியார் நிறுவன ஊழியர்கள் வசதிக்காக மும்பையில் இன்று முதல் பெஸ்ட் பஸ் சேவை
தனியார் நிறுவன ஊழியர்கள் வசதிக்காக இன்று முதல் மும்பையில் பெஸ்ட் பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது.
மும்பை,
மும்பையில் தினமும் 30 லட்சத்துக்கும் அதிகம் பேர் பயணம் செய்யும் பெஸ்ட் பஸ்களின் சேவை கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மாநில அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து உள்ளது. இதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்த மற்ற இடங்களில் 10 சதவீத ஊழியர்களுடன் தனியார் நிறுவனங்கள் செயல்பட உள்ளது. கொரோனா அதிகம் பாதித்த மும்பையிலும் இந்த தளர்வு நடைமுறைக்கு வருகிறது.
இந்தநிலையில் மும்பையில் தனியார் நிறுவன ஊழியர்கள், ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்ட வியாபாரிகள், பிளம்பர்கள், எலெக்ட்ரீசியன் போன்றவர்கள் செல்ல வசதியாக இன்று முதல் பெஸ்ட் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
எனினும் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் பெஸ்ட் பஸ்சில் 2 இருக்கைக்கு ஒருவர் என அதிகபட்சம் 30 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெஸ்ட் செய்தி தொடர்பாளர் மனோஜ் வாரடே கூறுகையில், ‘‘ஒரு பஸ்சில் அதிகபட்சம் 5 பேர் நின்றபடி பயணம் செய்யலாம். இருக்கையில் உள்ளவர்கள் உள்பட மொத்தமாக 30 போ் மட்டுமே செல்ல முடியும். மாடி பஸ், மினி பஸ்களில் இருக்கைகள் எண்ணிக்கையை பொறுத்து பயணிகள் ஏற்றப்படுவார்கள்’’ என்றார்.
இதேபோல பயணிகள் பஸ்சில் ஏறும் போது நிறுவன அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். பிளம்பர், எலெக்ட்ாீசியன் போன்றவர்களை நடத்துனர்கள் விசாரித்து பஸ்சில் ஏற்றுவார்கள். இதேபோல பஸ்சில் பயணம் செய்யும் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும்.
ஏற்கனவே அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்களின் வசதிக்காக பெஸ்ட் நிறுவனம் சுமார் 1,800 பஸ்களை இயக்கி வந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 2 ஆயிரமாக அதிகரிக்கப்பட உள்ளதாகவும், பின்னர் வாரந்தோறும் சுமார் 300 பஸ்களின் சேவை அதிகரிக்கப்படும் என அதிகாரி ஒருவர் கூறினார். இதேபோல மும்பை பெருநகர பகுதிகளில் இருந்து மும்பைக்கு நவிமும்பை மாநகராட்சி பஸ்களும், அரசு பஸ் சேவைகளும் இயக்கப்பட உள்ளன.
கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.