கொரோனாவில் இருந்து மீண்ட கவுன்சிலர் இம்ரான் பாட்ஷா கைது போலீஸ் தடியடி: 144 தடை உத்தரவு
கொரோனாவில் இருந்து மீண்ட பெங்களூரு பாதராயனபுரா கவுன்சிலர் இம்ரான் பாட்ஷா விதிமுறைகளை மீறி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இதனால் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பின்னர் பாதராயனபுரா வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பெங்களூரு,
பெங்களூரு பாதராயனபுரா வார்டு கவுன்சிலராக இருந்து வருபவர் இம்ரான் பாட்ஷா. ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர். இவருக்கு கடந்த மாதம்(மே) உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில், இம்ரான் பாட்ஷாவுக்கு மே 29-ந் தேதி இரவு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மறுநாள் (30-ந் தேதி) அவர் விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக கொரோனா பாதித்த அவர் ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்ததுடன், தனது வீட்டு முன்பு கூடிய ஆதரவாளர்களையும் சந்தித்தும் பேசி இருந்தார். இதுதொடர்பாக ஏற்கனவே கவுன்சிலர் இம்ரான் பாட்ஷா மீது ஜே.ஜே.நகர். போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விக்டோரியா ஆஸ்பத்திரியில் தனிமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இம்ரான் பாட்ஷாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த அறிக்கையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும், குணமடைந்து விட்டதும் உறுதியானது. இதையடுத்து, 7 நாட்களுக்கு பிறகு அவர் நேற்று மதியம் விக்டோரியா ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இருந்தாலும், அவர் 14 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் இம்ரான் பாட்ஷாவை வரவேற்க ஆஸ்பத்திரி அருகே, அவரது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.
பின்னர் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் இம்ரான் பாட்ஷாவை, அவரது ஆதரவாளர்கள் ஹெல்மெட் அணியாமல் பாதராயனபுராவுக்கு ஊர்வலமாக அழைத்து சென்றனர். இந்த ஊர்வலகத்தில் திறந்த வாகனத்தில் நின்றபடி கவுன்சிலர் இம்ரான் பாட்ஷா தனது ஆதரவாளர்களை பார்த்து கையசைத்தபடி சென்றார். அவர் சென்ற வழியெங்கும் பூக்கள் தூவப்பட்டன. பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன. இம்ரான் பாட்ஷாவுக்கு அவரது ஆதரவாளர்கள் மலர் மாலை அணிவித்தனர். பாதராயனபுராவில் வைத்து இம்ரான் பாட்ஷாவை பட்டாசு வெடித்து, அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இந்த நிலையில், ஊரடங்கை மீறி இம்ரான் பாட்ஷாவின் ஆதரவாளர்கள் ஊர்வலம் செல்வது பற்றி அறிந்த ஜே.ஜே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ஜே.ஜே.நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ், ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினார். விதிமுறைகளை மீறி இம்ரான் பாட்ஷாவை ஊர்வலமாக அழைத்து வந்ததால் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தார். இதனால் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது.
அதே நேரத்தில் விதிமுறைகளை மீறி திறந்த காரில் ஊர்வலமாக வந்த கவுன்சிலர் இம்ரான் பாட்ஷாவை போலீசார் கைது செய்தார்கள். அவரை, பாதராயனபுராவில் இருந்து ஜே.ஜே.நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். கவுன்சிலர் கைது செய்யப்பட்டதால் பாதராயனபுராவில் பதற்றம் அதிகரித்தது. இதுபற்றி அறிந்ததும் போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ், மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ரமேஷ் பானூத் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
மேலும் கவுன்சிலர் கைது நடவடிக்கையால், பாதராயனபுராவில் அசம்பாவிதங்கள் நடைபெறும் சூழ்நிலை உருவானதால், அங்கு 144 தடை உத்தரவை பிறப்பித்து போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அத்துடன் பாதராயனபுராவுக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 4 பிளட்டூன் கர்நாடக ஆயுதப்படை போலீசார், ஒரு பிளட்டூன் அதிவிரைவு படையினர் பாதராயனபுராவுக்கு வரவழைக்கப்பட்டனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பாதராயனபுராவில் திறக்கப்பட்டு இருந்த அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. சில பகுதிகளில் திறந்திருந்த கடைகளையும் போலீசார் அடைக்கும்படி கூறியதால், உரிமையாளர்கள் அடைத்தனர். மக்கள் வீட்டை விட்டு வெளியே சுற்றவும் தடை செய்யப்பட்டது.
பாதராயனபுராவின் ஒவ்வொரு பகுதியாக சென்று போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் பார்வையிட்டார். அதே நேரத்தில் தேவையில்லாமல் சாலையில் சுற்றி திரிந்தவர்கள், இம்ரான் பாட்ஷாவின் ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தார்கள். மேலும் பாதராயனபுராவை போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் நிலவிய பதற்றம் தணிந்தது.
இந்த நிலையில், விதிமுறைகளை மீறி ஊர்வலம் நடத்தியதாகவும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்ததாகவும் கூறி ஜே.ஜே.நகர் போலீஸ் நிலையத்தில் கவுன்சிலர் இம்ரான் பாட்ஷா மீது எம்.டி.எம்.ஏ. சட்டப்பிரிவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் கைதான கவுன்சிலர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருப்பதுடன், 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பதால், ஜே.ஜே.நகர் போலீஸ் நிலையத்தில் இருந்து இம்ரான் பாட்ஷாவை அழைத்து சென்ற போலீசார், ரகசிய இடத்தில் தனிமைப்படுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் பிரதிநிதியான ஒருவர் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் ஊர்வலம் நடத்திய சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதராயனபுராவில் ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் தாக்கி வன்முறை சம்பவம் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.