சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்ந்து உணவு அருந்த செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன? ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பேட்டி
கோவை மாவட்டத்தில் 225 பெரிய ஓட்டல்கள் உள்பட அனைத்து ஓட்டல்களிலும் அமர்ந்து உணவு அருந்தும் வசதி இன்று (திங்கட்கிழமை) முதல் நடை முறைப்படுத்தப்படுகிறது. சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
கோவை,
ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சீனிவாஸ், சிவா ஆகியோர் கூறியதாவது:-
ஓட்டலில் உள்ள மொத்தம் இருக்கைகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த
அனுமதிக்கப்படும். வாடிக்கையாளர்களின் உடல் வெப்பபரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இருமல், காய்ச்சல், சளி
இருப்பவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏ.சி. எந்திரங்களை பயன்படுத்தாமல் காற்றோட்டத்துக்காக அனைத்து
ஜன்னல்களும் திறந்து வைக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் வசதி செய்யப்படுவதுடன்கழிவறைகள் தினமும் 5 முறை
சுத்தம் செய்யப்படும். அடிக்கடி கைபடக்கூடிய மேஜைகள், பணம் செலுத்துமிடம், லிப்ட் பட்டன் போன்றவை சானிடைசர் மூலம்
அடிக்கடி சுத்தம் செய்யப்படும். சமூக இடைவெளிக்காக மேஜைகளில் சேவை இல்லை என்ற தகவல் பலகை வைக்கப்படும்.
சுகாதாரமுறையில் உணவு தயாரித்து வழங்கப்படும். இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.
உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் தமிழ்செல்வன் கூறுகையில், கோவை மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் சமூக
இடைவெளியை கடைபிடிக்கவும், அரசு விதித்துள்ள விதிமுறைகளை மேற்கொள்ளவேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத
ஓட்டல்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.