நொய்யல் ஆறு விரிவாக்க பணியில் விவசாயிகளை இணைத்து பணியாற்றுங்கள் அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தல்

நொய்யல் ஆறு விரிவாக்க பணியில் விவசாயிகளை இணைத்து பணியாற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தினார்.

Update: 2020-06-07 00:12 GMT
கருமத்தம்பட்டி,

நொய்யல் ஆறு விரிவாக்க பணியில் விவசாயிகளை இணைத்து பணியாற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தினார்.

பூமி பூஜை

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்கள் வழியாக செல்லும் நொய்யல் ஆற்றை ரூ.230 கோடியில் மேம்படுத்தும் பணியை தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக சூலூர் தொகுதியில் நொய்யல் ஆறு வழித்தடத்தில் ரூ.43 கோடியில் நொய்யல் ஆற்றை மேம்படுத்தும் பணி மற்றும் ஐ.யு.டி.எம். திட்டத்தின் கீழ் திருச்சி சாலையில் இருந்து ராவத்தூர் செல்லும் சாலையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ.3 கோடியே 87 லட்சத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.

நிகழ்ச்சிக்கு வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், சூலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மாதப்பூர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

விவசாயிகள்

அப்போது அவர் அதிகாரிகளிடம், நொய்யல் ஆற்றை மேம்படுத்தும் மற்றும் விரிவாக்க பணியில் அதிகாரிகள் ஈடுபடும்போது அந்தந்த பகுதி விவசாயிகளை இணைத்து கமிட்டி அமைத்து அவர்களை இணைத்து பணியாற்ற வேண்டும். திட்டமிட்டபடி அளவுகோல்கள் முறையாக பின்பற்ற வேண்டும். மேலும் இந்த பணியால் எல்லா குளங்களும் சீரமைக்கப்படுவதுடன், சிதிலமடைந்த அணைக்கட்டுகளும் சரிசெய்யப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் தோப்பு க.அசோகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சூலூர் லிங்கசாமி, சூலூர் கூட்டுறவு வீட்டுவசதி கடன் சங்க தலைவர் ஏ.அங்கண்ணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் வி.கே.சண்முகம், நகர செயலாளர்கள் இருகூர் ஆனந்தகுமார், ஏ.சி.மகாலிங்கம், கார்த்திகைவேலன், அங்கமுத்து, மணி, ஊராட்சி தலைவர்கள் ஜி.குமாரவேல், ரங்கநாதன், வி.பி.கந்தவேல், என்.ராஜலட்சுமி தேவராஜன், வி.ஜானகி தங்கவேல், கலங்கல் நடராஜ், பதுவம்பள்ளி செந்தில், அரசூர் தன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்