கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கடலூரில் மத்திய குழுவினர் ஆய்வு
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கடலூரில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
கடலூர்,
கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளை ஆய்வு செய்வதற்காக தொழில் மற்றும் உள்வர்த்தக மேம்பாட்டுத்துறை இணை செயலாளர் ராஜேந்திர ரத்னூ தலைமையில் ஜிப்மர் டாக்டர்கள் அடங்கிய மத்திய குழுவினர் தமிழகம் வந்தனர்.
அவர்கள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், கடலூர், அரியலூர், விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து, சோதனை செய்து, அவர்களை தனிமைப்படுத்தி எடுக்கப்படும் நடவடிக்கை முதல் கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்று அங்கு நிலவரம் எப்படி உள்ளது, மாநில அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக வருகை தந்தனர்.
அதன்படி தொழில் மற்றும் உள்வர்த்தக மேம்பாட்டுத்துறை இணை செயலாளர் ராஜேந்திரரத்னூ தலைமையில் ஜிப்மர் டாக்டர்கள் 2 பேர் அடங்கிய மத்திய குழுவினர் நேற்று கடலூர் வந்தனர்.
பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஆகியோருடன் மஞ்சக்குப்பம் தண்டபாணிநகர், பாண்டுரங்கன்தெரு ஆகிய இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று, அங்கு மாவட்ட நிர்வாகம் செய்துள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும் கட்டுப்பாட்டு பகுதிகளையும் ஆய்வு செய்து, அங்கு மாவட்ட நிர்வாகம் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை நேரில் பார்வையிட்டனர்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் ராஜேந்திரரத்னூ கலந்து கொண்டு, மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள், இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டது எப்படி? போன்ற பல்வேறு விவரங்களை கலெக்டர் அன்புசெல்வனிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து ராஜேந்திரரத்னூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு குழு அமைத்துள்ளது. இதில் தமிழகத்திற்கு எனது தலைமையில் 2 ஜிப்மர் டாக்டர்கள் கொண்ட குழுவை நியமித்துள்ளது. நாங்கள் சென்னையில் சுகாதாரத்துறை செயலாளருடன் ஆய்வு செய்தோம். இந்த குழுவின் நோக்கம் குறைகளை கண்டறிவது அல்ல. கொரோனா தடுப்பு பணியில் மாநில அளவில் குழுவாக இணைந்து சிறப்பாக செயல்படுகிறார்கள். மாநில, மாவட்ட மற்றும் கிராம அளவில் அனைவரும் இணைந்து பணியாற்றுவதே இதன் நோக்கம். இதற்காக மத்திய அரசு, மாநிலங்களில் எவ்வாறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்பதை கண்டறிந்து, அந்த மாநிலத்திற்கு ஆதரவாக தடுப்பு பணிகளை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
இறப்பு விகிதம் குறைவு
அதேபோல் மாநிலத்தில் செய்யப்படும் சிறப்பு பணிகளையும் எடுத்துக்கொள்கிறோம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதாக சிலர் கூறி வருகிறார்கள். இருப்பினும் இறப்பு விகிதம் 0.8 சதவீதத்திற்கு குறைவாக உள்ளது. இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.
கட்டுப்பாட்டு பகுதியில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மருத்துவ உதவி, சுகாதாரப்பணிகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் பற்றியும் ஆய்வு செய்கிறோம்.
உபகரணங்கள் தேவை என்று அறிக்கை கொடுத்தால், அதை மத்திய அரசுக்கு தெரிவிப்போம். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கடலூர் மாவட்ட கலெக்டரிடம் ஆய்வு நடத்தினோம். இதுவரை செய்துள்ள பணிகள் குறித்து எடுத்துக்கூறினார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செய்துள்ளார்கள். டெல்லி மாநாடு, கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் இருந்து வந்தவர்களால் கொரோனா பாதிப்பு இருந்தது. பிறகு போலீஸ் பயிற்சி பள்ளியில் இருந்து காவலர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும் இந்த கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், அனைத்துத் துறை அதிகாரிகள், பணியாளர்களை பாராட்டுகிறேன்.
பேரிடர் காலங்களில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு கடலூர் மாவட்ட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தார்கள். அதேபோல் கொரோனா தடுப்பு பணியிலும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இந்த கொரோனா சாதாரண நோய் அல்ல. பழைய அனுபவமும் கிடையாது. தற்போது தான் இது பற்றி அறிந்து இருக்கிறோம். இதை தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.
அதேபோல் வாழ்வாதாரத்தையும் பார்க்க வேண்டியதிருக்கிறது. நாம் வளர்ச்சி அடைந்தநாடு அல்ல. ஒரு பக்கம் நோயை தடுக்க வேண்டும். மறுபுறம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும். அதனால் தான் தொழில் நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதில் எப்படி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சானிடைசர் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு அறிவுரைகள் மாவட்ட கலெக்டர் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு ராஜேந்திரரத்னூ கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பூவராகன், நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.