தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் 29 பேர் கைது
ராஜபாளையத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் நேரு சிலை எதிரே தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அம்மையப்பன் முன்னிலை வகித்தார். அக்ரி சுப்பிரமணியன், ராமமூர்த்தி, பால்சாமி, சங்கிலி, பாலகிருஷ்ணன், முருகேசன் உள்ளிட்ட விவசாய சங்க பொறுப்பாளர்கள் பங்கேற்று எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதில் புதிய விவசாய மின் இணைப்புகளை கூடுதல் மின் பளு எவ்வித கட்டணமின்றி வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு குறுகிய கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், சர்க்கரை ஆலை நிலுவை தொகையை வட்டியுடன் வசூலித்து தரவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அனுமதி யின்றி கூட்டம் கூடியதாக 29 விவசாயிகளை ராஜபாளையம் வடக்கு போலீசார் கைது செய்தனர்.