நாமக்கல்லில் பொதுத்தேர்வுகளுக்கான முன்னேற்பாடு கூட்டம் ; கலெக்டர் தலைமையில் நடந்தது
நாமக்கல்லில் மேல்நிலை மற்றும் இடைநிலை பொதுத்தேர்வுகளுக்கான முன்னேற்பாடு கூட்டம் கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மேல்நிலை மற்றும் இடைநிலை பொதுத்தேர்வுகளுக்கான மாவட்ட முன்னேற்பாடு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் உதவி கலெக்டர்கள் கோட்டைக்குமார், மணிராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள் உதயகுமார், ரவி மற்றும் போக்குவரத்துத்துறை, சுகாதாரத்துறை உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த கலெக்டர் மெகராஜ் கூறியதாவது:-
மாவட்டத்தில் 21,305 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். ஏற்கனவே 90 தேர்வு மையங்கள் இருந்தன. தற்போது 218 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. எந்த மாணவரும் பஸ் ஏறுவதற்காக 500 மீட்டருக்கு மேல் நடந்து செல்லும் நிலை ஏற்படாத வகையில், மாணவர்கள் தங்கள் இல்லங்களின் அருகில் இருந்தே பஸ்சில் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெற்றோரும், மாணவர்களும் வருகிற 8 மற்றும் 9-ந் தேதிகளில் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம். பிற மாவட்டங்களான சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் வருவதில் எந்த சிக்கலும் இல்லை. திருச்சி மாவட்டத்தில் இருந்து வரும் மாணவர்கள் தனியார் பள்ளியை சேர்ந்தவர்களாக உள்ளதால், அந்தந்த தனியார் பள்ளிகள் மூலமே வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொல்லிமலையில் பொதுவாக 2 மையங்கள் இருந்து வந்தது. தற்போது 8 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பெரும்பாலும் மாணவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே தேர்வு மையங்கள் உள்ளன. இருப்பினும் யாருக்காவது தேவைப்பட்டால் அங்குள்ள அரசுத்துறைகளின் 9 ஜீப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்து தேர்வு மையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வுக்கு வரும் மாணவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வாங்க வரும்போது மாணவர்களுக்கு 2 முக கவசங்கள் வழங்கப்படும். மற்றொன்று அந்தந்த தேர்வு மையங்களில் கூடுதலாக வைக்கப்படும்.காலை 8.30 மணி முதல் 8.45 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வருமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறியுடன் மாணவர் யாரேனும் வந்தால் அவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக 30 சிறப்பு தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு கலெக்டர் மெகராஜ் கூறினார்.