கோவை கணபதியில் 178 பேருக்கு நிவாரண பொருட்கள்
கோவை கணபதியில் தினக்கூலி வேலைக்கு செல்லும் 178 ஏழை-எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கணபதி,
கோவை கணபதி மணியக்காரபாளையம் மாணிக்கவாசகர் நகரில் தினக்கூலி வேலைக்கு செல்லும் 178 ஏழை-எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் மு.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதில் முருகேசன், செல்வராஜ், அசோகன், ஜெகதீஷ், குமார், சீனிவாசன், மருதாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.