கோவில்பட்டியில் ரூ.2.83 கோடியில் யூனியன் அலுவலகம் கட்ட பூமி பூஜை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
கோவில்பட்டியில் ரூ.2.83 கோடியில் யூனியன் அலுவலகம் கட்ட பூமி பூஜையை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் ரூ.2 கோடியே 83 லட்சம் செலவில் புதிய யூனியன் அலுவலகம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதிய யூனியன் அலுவலகம் கட்டுவதற்கு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர், கோவில்பட்டி யூனியன் அலுவலக வளாகத்தில் ரூ.48 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட வித்யபிரகாசம் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கூடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக கட்டப்பட்ட, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
பின்னர் அவர், கோவில்பட்டி அருகே ஆலம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார். தொடர்ந்து கோவில்பட்டியை அடுத்த சாலைப்புதூர் இ.பி.காலனியில் ரூ.17 லட்சத்து 26 ஆயிரம் செலவில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, சின்னப்பன் எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, தாசில்தார் மணிகண்டன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர், கோவில்பட்டி யூனியன் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், யூனியன் துணை தலைவர் பழனிசாமி, யூனியன் ஆணையாளர்கள் மாணிக்கவாசகம், வசந்தா,
சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பொன் இசக்கி, துணை இயக்குனர் டாக்டர் அனிதா, அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன், உறைவிட மருத்துவர் பூவேசுவரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.