ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானையின் உடல் வெப்பத்தை தணிக்க இருவேளை குளியல்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானையின் உடல் வெப்பத்தை தணிக்க இரு வேளை குளிர்ந்த நீரில் குளிக்க வைக்கப்படுகிறது.

Update: 2020-06-05 04:52 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் கொளுத்துகிறது. இதனால் அனல் காற்று வீசுகிறது. மேலும் மதிய வேளையில் வெயிலின் தாக்கம் உக்கிரமாக உள்ளது. காலை 8 மணி அளவில் தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை நீடிக்கிறது. அதனால் மதிய வேளைகளில் சாலையில் செல்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.

இந்தநிலையில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதாவின் உடல் வெப்பத்தை தணிக்க காலை, மாலை இரு வேளைகளிலும் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக குளிர்ந்த நீரில் குளிக்க வைக்கப்படுகிறது. கோடை வெயில் காரணமாக குளிக்க ஆரம்பித்தவுடனே கோயில் யானை குஷியாகி விடுகிறது. அந்த ஒரு மணி நேரம் குளித்து மகிழ்ந்து, தனது உடல் மீது தண்ணீரை வாரி வீசி மகிழ்ச்சியாக உள்ளது.

பொதுவாக யானை தினமும் ஒரு வேளை குளிக்க வைக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் இரண்டு வேளையும் குளிக்க வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்