கொடைக்கானலில் முதல் கொரோனா பாதிப்பு

கொடைக்கானலில் முதல் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது

Update: 2020-06-05 00:00 GMT


சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூர் நபர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானல் மலைப்பகுதி, நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு இல்லாத பகுதியாக விளங்கியது. இந்தநிலையில் கொடைக்கானலை சேர்ந்த மாணவிக்கு நேற்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு முதல் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்