500 பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் ; அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எச்சரிக்கை
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி,
நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதுவையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 நாட்களாக 3 ஆக மட்டுமே இருந்தது. ஆனால் கடந்த 20 நாட்களாக தினந்தோறும் 4 அல்லது 5 பேருக்கு குறையாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று முன்பே கூறப்பட்டது. எனவே ஒவ்வொரு மாதமும் 250 முதல் 300 பேர் வரை பாதிக்கப்படக்கூடும். ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம் 500 பேருக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு தேவையான படுக்கை வசதி நம்மிடம் உள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நாம் மிகவும் பாதுகாப்பான நிலையில் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.