ஆம்புலன்ஸ் வர தாமதம்: ஆஸ்பத்திரியில் பிரசவித்த சிறிது நேரத்தில் இளம்பெண் சாவு-குழந்தையும் இறந்தது
ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் ஆஸ்பத்திரியில் பிரசவித்த சிறிது நேரத்தில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார். குழந்தையும் இறந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அச்சரப்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் சிறுதாமூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னன். இவருடைய மனைவி பிரியா (வயது 21). இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அருகில் உள்ள ஒரத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு பிரியாவை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு உடல்நிலை மிகவும் பலவீனமாக இருப்பதாக கூறி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க பரிந்துரைத்தனர். ஆனால் அவரை அழைத்துச்செல்ல தகவல் தெரிவித்தும் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவில்லை என தெரிகிறது.
காலதாமதமாக வந்த ஆம்புலன்சில் பிரியாவை அழைத்து சென்று செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பெண் குழந்தை பிறந்தது.
ஆனால் பிரியாவின் உடல்நிலை மோசமடைந்து பிரசவித்த சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் பச்சிளம் பெண் குழந்தையும் இறந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரியாவின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு ஒரத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் வர கால தாமதம் ஆனதால்தான் தாயும், குழந்தையும் இறந்ததற்கு காரணம். பிரியாவின் குடும்பத்துக்கு அரசு உதவி செய்ய வேண்டும். ஒரத்தி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தனி ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்துவந்த அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், ஒரத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
உயிரிழந்த பிரியாவுக்கும், அவரது குழந்தைக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர்களது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.