செம்பனார்கோவில் ஒன்றிய பகுதியில் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி நல உதவிகள்

செம்பனார்கோவிலில் தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா நடைபெற்றது.

Update: 2020-06-04 00:12 GMT
பொறையாறு, 

செம்பனார்கோவிலில் தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நிவேதா எம்.முருகன் தலைமை தாங்கினார். 

ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல்மாலிக், மாவட்ட துணை செயலாளர் மு.ஞானவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் வரவேற்றார். இதில் மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், செம்பனார்கோவில் மேலமுக்கூட்டில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

பின்னர் ஏழை-எளிய மக்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சித்திக், அருள்செல்வன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் சம்சுதீன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஸ்ரீதர், நகர செயலாளர் வெற்றிவேல், ஊராட்சி செயலாளர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மகளிர் அணியினர், விவசாய அணியினர், மீனவ அணியினர், இளைஞர் அணியினர், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

இதேபோல் செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரசலூர், மேமாத்தூர், பொறையாறு, தரங்கம்பாடி, திருக்கடையூர், ஆக்கூர் உள்ளிட்ட 57 ஊராட்சி பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்