கல்விக்கட்டணம் கேட்டு வலியுறுத்தக் கூடாது; கல்வித் துறை உத்தரவு

புதுவை கல்வித்துறை இணை இயக்குனர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-06-03 23:10 GMT
புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அடுத்த கல்வியாண்டுக்கான கல்வி கட்டணம், பஸ் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்தக்கோரி பெற்றோர்களை வலியுறுத்த கூடாது.

இதேபோல் கடந்த கல்வி ஆண்டில் செலுத்தப்படாமல் உள்ள நிலுவை தொகைகளை செலுத்த சொல்லியும் வற்புறுத்தக்கூடாது அவ்வாறு வலியுறுத்துவது ஏற்கனவே கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள உத்தரவுக்கு எதிரானது. இந்த உத்தரவினை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் இணை இயக்குனர் குப்புசாமி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்