திருப்பூர் காந்திநகரில் இயங்கி வந்த வருங்கால வைப்புநிதி அலுவலகம் இடமாற்றம் பல்லடம் சாலையில் செயல்பட தொடங்கியது

திருப்பூர் பல்லடம் ரோட்டில் புதிய கட்டிடத்தில் வருங்கால வைப்புநிதி அலுவலகம் செயல்பட தொடங்கியது.

Update: 2020-06-03 04:31 GMT
திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், அவினாசி, பல்லடம், வெள்ளகோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்காக திருப்பூர் மாவட்ட வருங்கால வைப்புநிதி அலுவலகம் திருப்பூர்-அவினாசி ரோடு, காந்திநகரில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த வாடகை கட்டிடத்தில் இடவசதி போதுமானதாக இல்லை.

இதனைத்தொடர்ந்து பல்லடம் ரோட்டில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு எதிர்புறம் தனியாருக்கு சொந்தமான கட்டிடம் வாடகைக்கு பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் இந்த புதிய கட்டிடத்தில் வருங்கால வைப்புநிதி அலுவலகம் செயல்பட தொடங்கியது.

இது குறித்து திருப்பூர் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் விஜய் ஆனந்த் கூறும்போது “காந்திநகரில் செயல்பட்டு வந்த வருங்கால வைப்புநிதி அலுவலகத்திற்கு தொழிலாளர்கள் வருவதற்கு பல்வேறு சிரமங்கள் இருந்து வந்தது. தற்போது இந்த இடமாற்றத்தின் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வருகிற பலரும் எளிதாக வருங்கால வைப்புநிதி அலுவலகத்திற்கு வந்து செல்ல முடியும். வருகிற 10-ந் தேதி இதன் திறப்பு விழா சிறப்பாக நடைபெற உள்ளது” என்றார்.

மேலும் செய்திகள்