ஓமலூர் அருகே மரங்கள் வெட்டி கடத்தல்
ஓமலூர் அருகே கோட்டமேட்டுப்பட்டி ஊராட்சியில் 100 ஏக்கர் பரப்பளவில் பூனேரி உள்ளது.
ஓமலூர்,
ஏரியின் கரைப்பகுதியில் பழமையான கருவேல மரங்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீசிய சூறைக்காற்று காரணமாக மரக்கிளை முறிந்து விழுந்தன. இதை பயன்படுத்தி ஒரு கும்பல் அங்கு விழுந்து கிடந்த மரக்கிளைகளையும், மரங்களையும் வெட்டி கடத்தி சென்றது.
மேலும் அந்த பகுதியில் சில மரத்துண்டுகளும் கிடந்தன. இதைப்பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
ஓமலூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் மரங்களை வெட்டி கடத்தியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.