தீயணைப்புத்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு போட்டி
சிவகாசி தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான ஓவிய போட்டியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
சிவகாசி,
தீயணைப்புத்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு கட்டுரை, ஓவிய போட்டி நடத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட அதிகாரி கணேசன் தலைமையிலும், உதவி அதிகாரி முத்துப்பாண்டி முன்னிலையிலும் கட்டுரை மற்றும் ஓவிய போட்டி நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அதிகாரி கணேசன் பரிசு வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை நிலைய அதிகாரி குமரேசன் செய்திருந்தார்.
இதேபோல் சிவகாசி தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான ஓவிய போட்டியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு அமர வைக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நிலைய அலுவலர் பாலமுருகன் பரிசு வழங்கினார்.