கிருஷ்ணகிரி புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பதவியேற்பு
கிருஷ்ணகிரி டவுன், தாலுகா, டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், கே.ஆர்.பி. அணை, காவேரிப்பட்டணம், குருபரப்பள்ளி, மகராஜகடை, வேப்பனப்பள்ளி ஆகிய போலீஸ் நிலையங்களை உள்ளடக்கியது கிருஷ்ணகிரி உட்கோட்டம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி உட்கோட்டத்தின் துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த குமார் ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய துணை போலீஸ் சூப்பிரண்டாக சரவணன் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு சேலம் மாநகர போலீஸ் உதவி கமிஷனராக பணியாற்றி வந்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், ஆரம்பத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி, பிறகு பதவி உயர்வு பெற்று ஓசூர் அட்கோ, சிப்காட், டவுன், தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார்.
அதன் பிறகு துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்ற அவர், கிருஷ்ணகிரி கலால் பிரிவு, சேலம் மாவட்டம் ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், சேலம் மாநகரில் உதவி கமிஷனராகவும் பணியாற்றி உள்ளார். புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.