கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் 450 கடைகளை திறக்கக்கோரி வியாபாரிகள் போராட்டம்

கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் உள்ள 450 கடைகளை திறக்கக்கோரி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-06-02 22:16 GMT
கோவை,

கோவை டவுன்ஹால் அருகே தியாகி குமரன் மார்க்கெட் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் 450 கடைகள் உள்ளன. கொரோனா ஊரடங்கால் இதில் 50 கடைகள் மட்டுமே திறக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் மற்ற வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்பட 1,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அனைத்து கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள். இன்றும் (புதன்கிழமை), கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வியாபாரிகள் அறிவித்து உள்ளனர்.

தவிப்பு

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, கடந்த 65 நாட்களாக எங்கள் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். இந்த சூழலில் 50 கடைகளை மட்டும் திறப்பது ஏற்புடையது அல்ல. எனவே அனைத்து கடைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி கொடுக்கும் அனைத்து விதிமுறைகளையும் முறையாக கடைபிடித்து தொழில் நடத்த தயாராக உள்ளோம் என்றனர்.

மேலும் செய்திகள்