ரூ.2¾ கோடி செலவில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணி தொடக்கம்
கடலூரில் ரூ.2¾ கோடி செலவில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணி தொடங்கியது.
கடலூர்,
கடலூரில் கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கன மழையால் பல்வேறு சாலைகள் குண்டும், குழியுமாக மாறியது. இதனால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. குறிப்பாக கடலூர் பஸ் நிலைய சாலை, ஷேர் ஆட்டோக்கள் வந்து செல்லும் லிங்க் ரோடு, சூரப்பநாயக்கன்சாவடி செல்லும் சாலை, நத்தவெளி சாலை போன்ற பல்வேறு சாலைகள் சேதமடைந்து காணப்பட்டது.
இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர். அதன்படி இந்த சாலைகளை சீரமைக்க தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம் 2018-19-ம் ஆண்டு நிதியின் கீழ் ரூ.2 கோடியே 72 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த சாலை அமைக்கும் பணி நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமப்பட்டனர்.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பஸ் நிலைய லிங்க் ரோடு நேற்று சீரமைக்கும் பணி தொடங்கியது. இந்த சாலை அமைக்கும் பணியை நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, பொறியாளர் புண்ணியமூர்த்தி அறிவுறுத்தலின் பேரில் உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் நேரில் பார்வையிட்டு, பணிகளை தரமான முறையில் செய்ய வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.
குண்டும், குழியுமாக இருந்த சாலை சீரமைக்கப்பட்டதால் ஆட்டோ டிரைவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிதியில் இருந்து பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்லும் சாலை, சூரப்பநாயக்கன்சாவடி சாலை உள்பட பல்வேறு சாலைகள் சீரமைக்கப்பட உள்ளதாக நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.