தி.மு.க. நிர்வாகிகளை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பட்டியலின மக்களை இழிவாக பேசுவதாக கூறி தி.மு.க. நிர்வாகிகளை கண்டித்து அ.தி.மு.க.வினர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
இதில் நகர செயலாளர் கேசவன், மாவட்ட விவசாய அணி தலைவரும், முன்னாள் சூளகிரி ஒன்றியக்குழு தலைவருமான பிரபாகரன், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் மகாலிங்கம், இளைஞர் அணி நிர்வாகி குரு, மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் செல்வம், குண்டுமணி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோவிந்தராஜ், நகர இளைஞர் அணி செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊத்தங்கரை அம்பேத்கர் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மணி, முருகன், சிவலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள கீழ்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டையில் அண்ணா நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. பிரமுகர் பிரேம்ராஜ் தலைமை தாங்கினார். அசேன் ராஜா முன்னிலை வகித்தார்.
இதில் தி.மு.க. நிர்வாகிகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல மாவட்டம் முழுவதும் தி.மு.க. நிர்வாகிகளை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உயர் பதவிகளில் உள்ள பட்டியலின மக்களை தொடர்ந்து இழிவாக பேசி வருவதாக கூறி தி.மு.க. நிர்வாகிகளை கண்டித்தும், அவர்களின் தரக்குறைவான பேச்சை கண்டிக்காத தி.மு.க. தலைவரை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரியில் புதுப்பேட்டை ரவுண்டானா அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இதில் பட்டியலின மக்களை அவதூறாக பேசி வரும் தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் நகர செயலாளர் கேசவன், மாவட்ட விவசாய அணி தலைவரும், முன்னாள் சூளகிரி ஒன்றியக்குழு தலைவருமான பிரபாகரன், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் மகாலிங்கம், இளைஞர் அணி நிர்வாகி குரு, மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் செல்வம், குண்டுமணி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோவிந்தராஜ், நகர இளைஞர் அணி செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊத்தங்கரை அம்பேத்கர் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மணி, முருகன், சிவலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள கீழ்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டையில் அண்ணா நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. பிரமுகர் பிரேம்ராஜ் தலைமை தாங்கினார். அசேன் ராஜா முன்னிலை வகித்தார்.
இதில் தி.மு.க. நிர்வாகிகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல மாவட்டம் முழுவதும் தி.மு.க. நிர்வாகிகளை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோன்று தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் அம்பேத்கர் சிலை அருகில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் விஜயசாரதி, நாசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது உயர் பதவியிலுள்ள பட்டியல் இன மக்களை இழிவாக பேசியதாக ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வலியுறுத்தியும் அவர் மீது நடவடிக்கை எடுக்காத தி.மு.க.வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.