நாகை போக்குவரத்து மண்டலத்தில் 50 சதவீத பஸ்களை இயக்க ஏற்பாடு
நாகை போக்குவரத்து மண்டலத்தில் 50 சதவீத பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
நாகப்பட்டினம்,
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் கட்டமாக 21 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பஸ், ரெயில், விமான போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. காய்கறி, மளிகை, பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
இந்த ஊரடங்கு 4-வது கட்டமாக கடந்த மாதம் (மே) 17-ந் தேதி முதல் நீட்டிக்கப்பட்டது. இதில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டன. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கியது.
இன்று (திங்கட்கிழமை) முதல் தமிழகத்தில் ரெயில்களும் இயக்கப்படுவதாக முன்னரே அறிவிப்பு வெளியாகி உள்ளது. 4-வது கட்ட ஊரடங்கு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் மத்திய அரசு 5-வது கட்ட ஊரடங்கை மேலும் சில தளர்வுகளுடன் அமல்படுத்தி உள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று முதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
நாகை போக்குவரத்துக்கழக மண்டலத்தில் நாகை, வேதாரண்யம், காரைக்கால், பொறையாறு, சீர்காழி, சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 11 கிளைகளில் 541 பஸ்கள் உள்ளன. இதில் 50 சதவீத பஸ்கள் அரசு விதிமுறைகளின்படி இன்று முதல் இயக்கப்பட உள்ளது.
இதற்காக பணிமனையில் உள்ள அனைத்து பஸ்கள் மீதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பழுது நீக்கும் பணிகளும் நடந்தன. அதன்பின்னர் பஸ்களை எந்தெந்த வழித்தடங்களில் இயக்குவது, டிரைவர்கள், நடத்துனர்களை எவ்வாறு பணி நியமனம் செய்வது என்பது குறித்தும், பயணிகளுக்கு சிரமம் இல்லாத வகையில் பஸ்களை இயக்குவது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.