மேட்டுப்பாளையத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க 50-வது ஆண்டு விழா
மேட்டுப்பாளையத்தில் சி.ஐ.டி.யு. பொது தொழிலாளர் சங்கம் சார்பில் 50-வது ஆண்டு நிறைவையொட்டி கொடியேற்று விழா நடந்தது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சி.ஐ.டி.யு. பொது தொழிலாளர் சங்கம் சார்பில் 50-வது ஆண்டு நிறைவையொட்டி கொடியேற்று விழா நடைபெற்றது. சங்க பொதுச்செயலாளர் எஸ்.பாஷா தலைமை தாங்கினார். தலைவர் ராஜன், பொருளாளர் சபரிகிரிசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் நகரின் பல்வேறு இடங்களில் தொழிற்சங்க கொடியேற்றி வைக்கப்பட்டது. சங்க பொறுப்பாளர் சாகுல் அமீது இனிப்பு வழங்கினார். மேலும் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கபசுர குடிநீர், ஓமியோபதி மாத்திரையும், சாலையோர சிறு வியாபாரிகளுக்கு நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்கப் பொறுப்பாளர்கள் சாகுல் அமீது, பதுருதீன், நிஜாமுதீன், ஆனந்தி, லட்சுமி, பாப்பாத்தி அம்மா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.