நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 120 பஸ்கள் இயக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 120 பஸ்கள் மண்டலத்திற்குள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
நாமக்கல்,

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி தமிழகத்தில் பஸ், ரெயில் மற்றும் விமான சேவை முற்றிலும் முடங்கி உள்ளன. இந்த ஊரடங்கு 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டாலும், பஸ்களை மண்டலங்களுக்கு இடையே இயக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் 8 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இதன்படி முதல் மண்டலத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் இடம் பெற்று உள்ளன. இந்த மாவட்டங்களுக்குள் இன்று (திங்கட்கிழமை) முதல் 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பஸ்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 60 சதவீத இருக்கைகள் மட்டுமே பயணிகள் அமரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு உள்பட 4 பணிமனைகள் உள்ளன. இந்த 4 பணிமனைகளிலும் சுமார் 260 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் டிரைவர், கண்டக்டர், தொழில் நுட்ப பணியாளர்கள் என 1,500 பேர் வரை பணியாற்றுகின்றனர். அனைத்து பணிமனைகளிலும் ஒரே இடத்தில் பஸ்கள் 2 மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால், அவற்றை பராமரிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. தற்போது பராமரிப்பு பணி முடிவடைந்து பஸ்கள் அனைத்தும் இயக்கத்திற்கு தயார் நிலையில் உள்ளன.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 4 பணிமனைகளிலும் நகர மற்றும் புறநகர் பஸ்கள் என சுமார் 260 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசின் உத்தரவுபடி இவற்றில் இன்று முதல் கட்டமாக 120 பஸ்களை மண்டலத்திற்குள் இயக்க முடிவு செய்து உள்ளோம்.
ஒவ்வொரு பஸ்சிலும் 32 பேரை மட்டுமே ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். பஸ்சில் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் சீட்டின் பின்புறம் ‘ரைட்’ என குறியீடு செய்து உள்ளோம். அந்த இருக்கையில் மட்டுமே பயணிகள் அமர வேண்டும். இதேபோல் டவுன் பஸ்களில் நம்பர் போடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.