ஆறுமுகநேரி அருகே கொலை செய்யப்பட்ட மாணவரின் தலை மீட்பு 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு; பதற்றம்-போலீசார் குவிப்பு
ஆறுமுகநேரி அருகே கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவரின் தலை மீட்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக 6 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆறுமுகநேரி,
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள தலைவன்வடலி சேதுராஜா தெருவை சேர்ந்தவர் பரமசிவம், கூலி தொழிலாளி. இவருடைய மகன் சத்தியமூர்த்தி (வயது 20). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கொரோனா காரணமாக கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால், வீட்டில் இருந்து வந்தார்.
சத்தியமூர்த்தி நடைபயிற்சி செய்வதற்காக ஊருக்கு தெற்கே உள்ள தலைவன்வடலி-ஆத்தூர் மெயின் ரோடு வரை செல்வது வழக்கம். நேற்று முன்தினம் மாலையும் அவர் நடைபயிற்சி சென்றார். ஆனால், இரவு வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை தேடினர்.
அப்போது ஊருக்கு தெற்கே உள்ள ஒரு கோவில் அருகில், சத்தியமூர்த்தி தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. அங்கு அவரது உடல் மட்டும் கிடந்தது. தலையை காணவில்லை. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்ரகாளி என்ற பவுன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
அப்போது சத்தியமூர்த்தியின் தலை கிடைப்பதற்கு முன்பு அவரது உடலை அப்புறப்படுத்தக்கூடாது என்று போலீசாரிடம் அப்பகுதி மக்கள் கூறினர். இதையடுத்து போலீசார் அவர்களை சமரசம் செய்து, உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் இரவு முழுவதும் அந்த பகுதியில் உள்ள முட்புதரில் தலையை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அந்த பகுதியில் பதற்றம் நிலவியதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று காலையில் சம்பவம் நடந்த இடத்துக்கு மேற்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வடிகால் ஓடை அருகில் தலை கிடந்தது தெரியவந்தது. போலீசார் அதை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் ‘ஜீனோ‘ வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து காட்டுப்பகுதி வழியாக ஓடி மீண்டும் ரோட்டுக்கு வந்தது. ஆனால், யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
இதற்கிடையே, இந்த கொலை தொடர்பாக சத்தியமூர்த்தியின் அண்ணன் ராஜேஷ், ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதில், ‘எனது தம்பியை கீழக்கீரனூரை சேர்ந்த 6 பேர் சேர்ந்து கொலை செய்து உள்ளனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தலைவன்வடலியை சேர்ந்த ஒருவர் உடலை அடக்கம் செய்தபோது, அந்த 6 பேருக்கும், சத்தியமூர்த்திக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. மேலும் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கீழக்கீரனூரை சேர்ந்த தென்னந்தோப்பில் யாரோ தேங்காய் பறித்ததை தலைவன்வடலியை சேர்ந்தவர்கள் தான் பறித்ததாக பேசியதையும் சத்தியமூர்த்தி தட்டிக்கேட்டு உள்ளார். எனவே, எனது தம்பியை அவர்கள் தான் கொலை செய்து உள்ளனர்‘ என்று கூறி உள்ளார்.
இதுதொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 6 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் தலைவன்வடலி, கீழக்கீரனூர் பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் அங்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.