காரைக்குடி போலீஸ்காரருக்கு கொரோனா

புதுக்கோட்டையில் உளவு பிரிவில் போலீசாக பணியாற்றி வருபவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

Update: 2020-05-30 06:00 GMT
காரைக்குடி,

காரைக்குடி என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் புதுக்கோட்டையில் உளவு பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். புதுக்கோட்டையில் போலீசாருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் காரைக்குடியை சேர்ந்த புதுக்கோட்டை உளவு பிரிவில் பணியாற்றும் போலீசுக்கு தொற்று இருப்பது உறுதியானது. அதனை தொடர்ந்து காரைக்குடியில் வீட்டிலிருந்து அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறையினர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் செய்திகள்