குளித்தலையில் பரிதாபம்: மதுபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்து தொழிலாளி பலி
குளித்தலையில், மதுபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை,
குளித்தலையில், மதுபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி சாவு
கரூர் மாவட்டம், குளித்தலை மீன்காரத்தெருவை சேர்ந்தவர் சுந்தரம் மகன் ஆனந்தன் (வயது 35). கூலித்தொழிலாளியான இவர், மதுபோதைக்கு அடிமையாக இருந்துள்ளார். வழக்கம்போல் இவர் நேற்று முன்தினம் மதுபோதையில் குளித்தலை பெரியபாலம் பகுதியில் உள்ள வாய்க்கால் பாலத்தின் மேல் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக வாய்க்காலுக்குள் தவறி விழுந்தார். வாய்க்காலில் தண்ணீர் இல்லாத காரணத்தால் கீழ் பகுதியில் உள்ள கற்களின்மேல் விழுந்ததில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் ஆனந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.