ரூ.7,500 நிவாரணம் வழங்கக்கோரி ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி, எட்டயபுரத்தில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-05-29 21:45 GMT
எட்டயபுரம், 

கோவில்பட்டியில் உள்ள அனைத்து ஆட்டோ நிறுத்தங்களிலும் ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,500 நிவாரண உதவி வழங்க வேண்டும். ஆட்டோ, கார், வேன் ஆகியவற்றுக்கு தகுதிச்சான்று புதுப்பிக்க அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் வரையிலும் நீட்டித்து அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை தலைவர் தமிழரசன், ஆட்டோ டிரைவர் சங்க செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எட்டயபுரம் மேலவாசல் ஆட்டோ நிறுத்தம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ டிரைவர் சங்க செயலாளர் ஹரிகரசுதன், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் சேது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை தலைவர் குணசீலன், ஆட்டோ டிரைவர் சங்க தலைவர் ஞானமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்