தனுஷ்கோடியில் கடல் சீற்றம்; ராட்சத அலைகள் எழும்பின
தனுஷ்கோடியில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழும்பின.
ராமேசுவரம்,
அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் அரபிக்கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும், அரபிக்கடல் ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் நேற்று காலை முதலே பலத்த காற்று வீசத் தொடங்கியது. தனுஷ்கோடி பகுதியில் பலத்த காற்றுடன் கடல் சீற்றமாக காணப்பட்டது. ராட்சத அலைகள் எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் மோதி சிதறின. மேலும் அரிச்சல்முனை அருகே தடுப்பு சுவர் கற்கள் மீது மோதி கடல் நீர் சாலைக்குள் புகுந்தது.
சீற்றம்
பலத்த காற்றால் எம்.ஆர்.சத்திரத்தில் இருந்து அரிச்சல்முனை வரை சாலையில் செல்லவே முடியாத அளவிற்கு கடற்கரை மணல் புழுதியாக தூற்றியது.
பலத்த காற்றால் புதுரோடு மற்றும் கோதண்ட ராமர் கோவிலுக்கு இடைப்பட்ட தனுஷ்கோடி சாலையின் குறுக்கே 2 மரங்கள் முறிந்து விழுந்தன. பாம்பன் பகுதியிலும் பலத்த காற்று வீசி வருவதுடன் தென் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.