ரூ.17½ கோடி மதிப்பில் 40 கண்மாய்களில் குடிமராமத்து பணி தொடக்கம் முறையான கண்காணிப்பு நடவடிக்கை தேவை
விருதுநகர் மாவட்டத்தில் ரூ.17½ கோடி மதிப்பீட்டில் 40 கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் முறையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
தமிழகம் முழுவதும் நீர்வள ஆதாரத்தை மேம்படுத்த குடிமராமத்து பணி திட்டத்தின்கீழ் நீர்நிலைகளை சீரமைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். கடந்த நிதி ஆண்டில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் 65 கண்மாய்களும் தலா ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் 100 சிறு பாசன கண்மாய்களும் மராமத்து செய்ய பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனாலும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் 90 சதவீத பணிகள் முடிந்த நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டன. பல கண்மாய்களில் வெளிநபர் தலையீடுகளால் மராமத்து பணிகள் முறையாக நடக்கவில்லை என புகார்கள் கூறப்பட்டு பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளரால் ஆய்வும் செய்யப்பட்டது.
40 கண்மாய்கள்
தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், நீர்நிலைகளை மேம்படுத்த அரசு உத்தரவிட்ட நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் ரூ.17½ கோடி மதிப்பில் 40 கண்மாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணிகள் நடைபெற வேண்டிய கண்மாய்களை பொதுப்பணித்துறையினர் தேர்வு செய்துள்ளனர். ஆனாலும் அத்தியாவசியமாக மராமத்து செய்யப்பட வேண்டிய பல கண்மாய்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.
வாய்ப்பு
வழக்கமாக பாசன சங்கங்கள் மூலம் இந்த குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும். தற்போது மத்திய, மாநில அரசுகள் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு முழுமையாக வேலை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், குடிமராமத்து பணியில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளையும் ஈடுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அந்தந்த கிராமங்களில் உள்ள நபர்களை பணி அமர்த்தினால் தான் மராமத்து பணி தொய்வின்றி நடக்க வாய்ப்பு ஏற்படும். மராமத்து பணியில் ஈடுபடுத்திக்கொள்ள விரும்பும் தன்னார்வ அமைப்புகளையும் மாவட்ட நிர்வாகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
எது எப்படி இருந்தாலும் கடந்த ஆண்டை போல வெளிநபர்கள் தலையீடு ஏதும் இல்லாமல் குடிமராமத்து பணிகளை பருவமழை தொடங்குவதற்கு முன்னர் முறையாக முழுமையாக முடிக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதுடன் முறையான கண்காணிப்புக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். மராமத்துபணி நடைபெறும் கிராமங்களில் பஞ்சாயத்து நிர்வாகத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.