மோடி மக்கள் உணவகம் திறப்பு; சாதம் வகைகள் 10 ரூபாய்
ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் நோக்கில் புதுவை வினோபா நகர் பொய்யாகுளம் அருகில் மோடி மக்கள் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இதை மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
புதுச்சேரி,
விழாவில் பொதுசெயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன்குமார், துணைத்தலைவர் செல்வம், செயலாளர்கள் ரத்தினவேல், அகிலன், ஜெயந்தி, லதா, உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் தொகுதி தலைவர் பசுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மோடி மக்கள் உணவகத்தை தட்டாஞ்சாவடி தொகுதி பா.ஜ.க. பொறுப்பாளர் செல்வக்குமார் தொடங்கி உள்ளார். அவர் கூறுகையில், ‘ஏழை மக்களின் பசியை போக்கும் வகையில் லாப நோக்கமின்றி மோடி மக்கள் உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு காலையில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், மதியம் தயிர், சாம்பார், புளியோதரை, எலுமிச்சை, தக்காளி சாதம் ஆகியவை தலா 10 ரூபாய்க்கும் வழங்கப்படும். தட்டாஞ்சாவடி தொகுதியில் மேலும் 2 இடங்களில் மோடி மக்கள் உணவகம் விரைவில் தொடங்கப்படும்’ என்றார்.