ஜீயபுரம் அருகே குடிபோதையில் வாலிபர் வெட்டிக்கொலை

ஜீயபுரம் அருகே குடிபோதையில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2020-05-28 04:17 GMT
ஜீயபுரம், 

ஜீயபுரம் அருகே குடிபோதையில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

மரம் வெட்டும் தொழிலாளி

திருச்சி குழுமணி அருகே உள்ள பேரூர் கீழத்தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 28). மரம்வெட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்தநிலையில் நேற்று மதியம் தச்சன்குடியில் உள்ள தனது நண்பர் மாணிக்கத்தின்(35) வீட்டிற்கு விஜயகுமார் சென்றார்.

அப்போது அங்கு எட்டரை வடக்கு தெருவை சேர்ந்த ரமேஷ்(37) வந்தார். பின்னர் 3 பேரும் சேர்ந்து மது குடித்தனர். அப்போது அவர் களுக்குள் குடிபோதையில் தகராறு ஏற்பட்டது.

வெட்டிக்கொலை

இதில் ஆத்திரம் அடைந்த மாணிக்கம், ரமேஷ் ஆகியோர் சேர்ந்து விஜயகுமாரை அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணிக்கம், ரமேஷ் ஆகியோரை பிடித்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்